இடைப்பாடியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி

இடைப்பாடி : இடைப்பாடியை சுற்றியுள்ள பூலாம்பட்டி, குப்பனூர், மூலபாறை, பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், சிலுவம்பாளையம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை பயன்படுத்தி நேந்திரம், கதலி, மொந்தவாழை உள்ளிட்ட வாழை ரகங்களை சாகுபடி செய்தனர். இந்நிலையில், அறுவடை சமயத்தில் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த மாதம் கதலி ரக வாழை கிலோ ₹50க்கு விற்றது. தற்போது கிலோ ₹20க்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.

Related Stories: