×

ஒட்டன்சத்திரத்தில் ஆதார் மையம் திறப்பு

ஒட்டன்சத்திரம் :  ஒட்டன்சத்திரம் நகராட்சியில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் சுமார் இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் பல மணி நேரம் காத்திருந்தும், அங்கும் டோக்கன் முறையில் ஒரு வாரம் வரை காத்திருந்து சேவைகளை பெற்று வந்தனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி தங்களது அன்றாட பணிகளை விட்டுவிட்டு காலை முதலே ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்திற்கு படையெடுத்து வந்தனர்.

இதுகுறித்து  தினகரன் நாளிதழில் பிப்.21ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி, செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், செய்தி எதிரொலியாக துரித நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும் பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.


Tags : Adar Center ,Ottawa , Ottansathram: The Aadhaar Center in Ottansathram municipality was closed last month. Thus
× RELATED திமுக வெற்றி பெற்றவுடன்...