×

போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்-பயணிகள் கடும் அவதி

தஞ்சை : போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே பேசி முடிக்காததால் தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சையில் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கின.14வது ஊதிய ஒப்பந்தம் சம்பந்தமாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பிப்.18ம் தேதி நடைபெற்றது. அதில் போக்குவரத்து துறை அமைச்சர், தொழிலாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பிப்.23ம் தேதி நல்ல முடிவாக அறிவிப்பேன் என்று உறுதியளித்தார்.

ஆனால் இதுநாள் வரை முறையான அறிவிப்பு வெளியிடாததால் 24ம் தேதி (நேற்று) மாலை முதல் சென்னை திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாலை முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அமைச்சர் தன்னிச்சையாக இடைக்கால நிவாரணம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும், வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மிரட்டியதை தொடர்ந்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை நடத்துவோம் என்று அறிவித்தார்கள்.

அதனடிப்படையில் வேலை நிறுத்தம் நேற்று அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கும்பகோணம் கழகத்தில் 10 பணிமனைகளில் 471 பேருந்துகள் புறநகர் மற்றும் நகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 30 சதவீதம் பேருந்துகள் மட்டும் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரால் இயக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.மேலும் போக்குவரத்து பணிமனை கிளைகள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

Tags : Tanjore: The workers of the Transport Corporation went to work yesterday as the 14th wage contract negotiations were not completed immediately
× RELATED 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்:...