மயிலாடும்பாறையில் சொட்டுநீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி தீவிரம்

வருசநாடு : மயிலாடும்பாறை பகுதியில்  சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடமலைக்குண்டு தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், தக்காளி பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களுக்கு சென்று ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தக்காளி விவசாயத்தை எவ்வாறு பாதுகாப்பது, எவ்வாறு உரம் இடுவது, எவ்வாறு பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளையும் அவர்கள் விவசாயிகளிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ராஜபிரியதர்ஷன், அன்பழகன், கோவிந்தன், செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: