ஆண்டிபட்டி பகுதியில் அறுவடைக்கு தயாராகும் வயல்கள்

ஆண்டிபட்டி :  ஆண்டிபட்டி பகுதியில் இந்த மாத இறுதியில் நெல் அறுவடை செய்யும் பணி துவங்க உள்ளது.  ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளான சில்வார்பட்டி, பாலக்கோம்பை, மாரிக்குண்டு, டி.சுப்புலாபுரம், ராஜதானி, ஏத்தக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி, வெங்காயம், வாழை, முருங்கை, பச்சை மிளகாய், மற்றும் மானாவாரி பயிர்களை விவசாயிகள் அதிகமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இதேபோல் வைகை ஆற்றை ஒட்டியுள்ள டி.அணைக்கரைபட்டி, புதூர், வெள்ளையத்தேவன் பட்டி பகுதிகளில் நெல் சாகுபடியும் செய்து வருகின்றனர். வைகை அணையிலிருந்து ஆற்றுப்பகுதி வழியாக அதிகப்படியான தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் நெல் சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் தற்போது அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் ஆற்றுப்பகுதி வழியாக செல்கிறது. நெல் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.  இந்த மாத இறுதியில் நெல் அறுவடை செய்யப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: