×

அதிகாரிகள் ஆசியோடு வனப்பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்-பொதுமக்கள் பரபரப்பு புகார்

வருசநாடு : வருசநாடு வனப்பகுதியில் பல்லாயிரக்கணக்கில் அரிய வகை மரங்கள் மலைப்பகுதியில் உள்ளன. இந்த மரங்களை இரவு, பகலாக வனத்துறை ஆசியோடு சமூக விரோதிகள் வெட்டி கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.கடமலை - மயிலை ஒன்றியத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வனத்துறை அமைந்துள்ளது. இதில் குறிப்பாக கண்டமனூர் வனச்சரகம், வருசநாடு வனச்சரகம், மேகமலை வனச்சரகம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, தற்போது வருசநாடு வனப்பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்து புதிய வனகாடுகள் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சில நாட்களாக அரிய வகை மரங்களை வெட்டி அளிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து உள்ளது. ஆனால் இதுவரையும் வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதிகளில் ஆய்வுப் பணியை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர், இதனால் வனத்துறைக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் சேதமும் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் வனப்பகுதியில் இருந்து உசில், சாலி,  விடத்தலை, அகில், மருதமரம், தோதகத்தி, புங்கு உள்ளிட்ட அரியவகை மரங்களை   வனத்துறை ஆசியோடு செங்கல் சூளை பணிகளுக்கு சமூக விரோதிகள் வெட்டிக் கடத்தில் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அர்ச்சுணன் கூறுகையில், ``பெயருக்கு நடவடிக்கை எடுக்காமல் தவறாக செயல்படும் அனைத்து அதிகாரிகள் மீதும்  மாவட்ட  வனத்துறை உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து வருசநாடு  வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``ஒவ்வொரு பகுதிகளிலும் வனப்பணியாளர்கள்  பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, இதுபோன்ற பணிகளை கண்காணிப்பது மிகவும்  சிக்கல் ஏற்படுகிறது. கூடுதலாக அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.
அவ்வாறு  செய்தால் அனைத்து வனப்பகுதிகளையும் பாதுகாக்க முடியும்’’ என்றனர்.

Tags : Varusanadu: In the Varusanadu forest, there are tens of thousands of rare species of trees in the hills. The night of these trees,
× RELATED யானை தாக்கி விவசாயி பலி