×

அதிவேக வாகனங்களால் அடிக்கடி விபத்து தேவதானப்பட்டியில் வேகத்தடை தேவை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்களால், அடிக்கடி விபத்து ஏற்படுவதால், சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேவதானப்பட்டி நகரம் அமைந்துள்ளது. இந்த வழித்தடம் வழியாக திண்டுக்கல், வத்தலக்குண்டு, குமுளி, கம்பம், தேனி ஆகிய நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன.

வட மாவட்டங்களில் இருந்து தேனி, வைகை அணை, கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தேவதானப்பட்டி வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில், தேவதானப்பட்டியில் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் இருந்து அட்டணம்பட்டி வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.

இதனால், அவ்வப்போது தொடர்ந்து சிறுசிறு விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் வரும் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அசுர வேகத்தில் வரும் பஸ்களால் ஏற்படும் விபத்தை தடுக்க தேவதானப்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் காவல்நிலையம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devadanapatti: To speed up the road due to frequent accidents caused by high speed private buses in Devadanapatti.
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...