திருச்சியில் குறைவான பேருந்துகளே இயக்கம்-பொதுமக்கள் அவதி

திருச்சி : திருச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக நேற்று குறைவான பஸ்களே இயங்கியது.

இதனால் பொதுமக்கள் பஸ்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி நேற்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்தனர். அதன்படி நேற்று போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கை தொடங்கினர்.

இதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு 11 மணி முதலே பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் திருச்சி மத்திய ேபருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் ஏராளமான பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரில் இயக்கப்படும் 440 பஸ்களில் 220 பேருந்துகளும், வெளியூர்களுக்கு இயக்கப்படும் 496 பஸ்களில் 230 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் அலுவலகம் மற்றும் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்துகள் இயக்கப்படாததால் சிரமத்திற்குள்ளாகினர்.

நேற்று முகூர்த்த தினம் என்பதால் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் காத்துக்கிடந்து அவதிக்குள்ளாகினர். இயக்கப்பட்ட பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர். தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories: