எல்லை அத்துமீறல் விவகாரத்தில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற பாகிஸ்தான் சம்மதம்

இஸ்லாமாபாத், பிப். 26: எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாக பின்பற்ற இந்திய, பாகிஸ்தான் அரசுகள் முடிவு செய்துள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் 5,133  முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு, இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், `எல்லை அத்துமீறல் விவகாரத்தில், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், போர் நிறுத்த ஒப்பந்தங்களை கடுமையாக பின்பற்ற இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. ஏற்கனவே, நடைமுறையில் இருக்கும் ஹாட்லைன் தொடர்புகள், எல்லையில் நடத்தும் கொடிக் கூட்டம் மூலமும் எல்லை அத்துமீறலுக்கு தீர்வு காணலாம்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>