பிரித்வி ஷா இரட்டைச் சதம்

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டியின்  எலைட்-டி பிரிவு லீக் ஆட்டங்கள் ஜெய்பூரில் நடக்கின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் மும்பை அணி 233 ரன் வித்தியாசத்தில் புதுச்சேரியை வீழ்த்தியது. மும்பை அணியின் கேப்டன் பிரித்வி ஷா  152 பந்துகளில்  31பவுண்டரி, 5 சிக்சருடன் 227* ரன் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கூடவே  சூர்யகுமார் யாதவ் 133ரன்(58பந்து, 22பவுண்டரி, 2சிக்சர்) விளாசியதால் மும்பை 50ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 457ரன் குவித்தது. வட மாநில வீரர்களுடன் புதுச்சேரி என்ற பெயரில் ஆடிய அணி 38.1ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 224ரன் மட்டுமே எடுத்தது.

Related Stories:

>