இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தாழ்த்தப்பட்ட பிரிவு: ஆணையத்தின் அறிக்கை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்

பெங்களூரு: இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக  தாழ்த்தப்பட்ட பிரிவு ஆணையத்தின்  அறிக்கை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்தார். பாகல்கோட்டையில் இது தொடர்பாக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:குருபர் சமுகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி காகினேலே சுவாமிஜிகள், ஈஸ்வரானந்தபுரி ஆகியோர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.  போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் முன்னாள் முதல்வர் சித்தராமையா வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர். அப்ேபாது சித்தராமையா ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளதாக சுவாமிஜிகள் என்னிடம் தெரிவித்தனர்.  இதனால் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்த சித்தராமையா பின்னர் ஏன் ஆதரவு வழங்கவில்லை என்று புரியவில்லை. அதே போல் பாகல்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை இதற்கு பின்னனில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக தெரிவித்தார்.  இத்துடன் குருபர் சமுகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க நடத்திய பாதயாத்திரைக்கு ஆர்.எஸ்.எஸ். நிதி உதவி வழங்கியதாக தெரிவித்தார்.

இதன் மூலம் சமுதாயத்தை சேர்ந்த அனைவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எதிர் பார்த்ததை விட மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. வரும் நாட்களில் இது போன்ற மாநாட்டை சித்தராமையா நடத்துவாரா அல்லது நடத்தாமல் இருப்பாரா என்பது அவருக்கு விடப்பட்ட விஷயம். இடஒதுக்கீடு கேட்டு சமுதாயங்கள் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் குறித்து அரசு கவனித்து வருகிறது. சுதந்திரம் கிடைத்த பின்னர் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அறிக்கை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தாழ்த்தப்பட்ட பிரிவு ஆணையத்தின் அறிக்கை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>