கார் மோதி 2 பேர் பலி கார் டிரைவரை கைது

பெங்களூரு:   பெங்களூரு யஸ்வந்த்புரா துமகூரு சாலையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் காந்த், கவுதம் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். யஸ்வந்த்புரா போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில் கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்ற சி.சி.டி.வி கேமரா காட்சிகள் கிடைத்தது. கார்  குறித்த விவரங்களை சேகரித்த போலீசார் பரத் என்ற வாலிபரை கைது செய்தனர். அலட்சியமாகவும், அதிவேகமாகவும் காரை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. கைதான பரத் மீது யஸ்வந்த்புரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Related Stories:

>