டெல்லியில் மீண்டும் உயருகிறது கொரோனா தொற்று பாதிப்பு: ஒரேநாளில் 220 பேருக்கு உறுதி

புதுடெல்லி; டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 220 பேருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் கொரோனா பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. பிப்ரவரி 1 முதல் 23ம் தேதி வரை பாதிப்பு எண்ணிக்கை 200க்குள் இருந்தது. நேற்று ஒரே நாளில் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 63,998 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 41260 ஆர்டிபிசிஆர் சோதனைகளும், 22,738 ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளும் நடத்தப்பட்டன. இதில் தான் தான் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டன. இதனால் கொரோனா ஒட்டுமொத்த பாதிப்பு 6,38,593 ஆக உயர்ந்தது. அதே சமயம் நேற்று யாரும் பலியாகவில்லை. இந்த மாதத்தில் 4 வது முறையாக பலி எண்ணிக்கை இல்லாதநாளாக இருந்தது. ஒட்டுமொத்த பாதிப்பு 10,905 ஆகவே இருந்தது. டெல்லியில் தற்போது ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 1169 ஆனது. வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 536 ஆனது.

Related Stories:

>