100 வழக்குகளில் சிக்கியவர் 1.50 கோடி ஹெராயினுடன் கைது

புதுடெல்லி:வடக்கு டெல்லி குலாபிபாக் பகுதியில் நேற்று சோதனை நடத்தியபோது ரூ.1.50 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் கர்னெய்ல்சிங் என்பது தெரியவந்தது. பிரதாப்நகர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் 258 கிராம் ஹெராயின் இருந்தது. இவர் மீது குலாபிபாக் ேபாலீஸ்நிலையத்தில் 2015ம் ஆண்டு ஒருவழக்குப்பதிவு செய்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் வழிப்பறி மற்றும் போலீசாரை தாக்கிய வழக்கில் 10 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்து விட்டு வந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 100 குற்றவழக்குகளில் இவர் தொடர்புடையவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது என்டிபிஎஸ் சட்டப்படி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: