உலகிலேயே நீளமான ஹூப்பள்ளி ரயில் நிலையம்: தென்மேற்கு ரயில்வே மேலாளர் ஆய்வு

ஹூப்பளி: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்பள்ளி ரயில் நிலையம் உலகிலேயே மிக நீளமான ரயில் நிலையமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தண்டவாள பணிகள் நிறைவடைந்துள்ளதாக தென்மேற்கு ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

 தற்போது செயல்பாட்டில் இருக்கும் ரயில் நிலையங்களிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் ரயில் நிலையம் இருக்கின்றது. சுமார் 1366 மீட்டர் நீளம் கொண்டது. இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் உள்ள,  சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம் சுமார் 1505 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வேவின்  பொதுமேலாளர் அஜய் குமார் சிங்  ரயில் நிலையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அதன் 3 நுழைவு வாயில்கள், கட்டிடங்கள் தண்டவாளங்கள், பிளாட்பாரம்களை மறுவடிவமைப்பு செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சுமார் 90 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தண்டவாளங்கள் மறுவடிவமைப்பு பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஹூப்பளியில் 5 பிளாட்பார்ம்கள் இருந்த போதிலும், பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. வளாக மறுவடிவமைப்பின் ஒரு பகுதியாக தற்போதுள்ள தளங்களின் தொடர்ச்சியாக மூன்று புதிய தளங்கள் நீளமாக சேர்க்கப்படுகின்றன. ஹூப்பள்ளி ரயில் நிலையம் சமீபத்தில் சித்தரூதாசுவாமி ஜி ரயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: