மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் 3 நாட்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நிமிர்வு கலையகம் அமைப்புடன் இணைந்து பயணிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்தவகையில், 26ம் தேதி (இன்று) புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலும், 27ம் தேதி சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திலும், 28ம் தேதி விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் தெருநிலை பறையாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Related Stories:

>