×

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும், திருவொற்றியூர் கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்த கஸ்தூரிக்கும் (23), கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த நாளில் இருந்தே மணிகண்டன் மற்றும் அவரது தாயார் சத்யவதி ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கஸ்தூரியை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர், கர்ப்பமாக இருந்தபோதும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் திருமணமான சில மாதங்களில் கஸ்தூரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து, வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மணிகண்டன், சத்யவதி ஆகியோர் மீது தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் எல். ஸ்ரீலேகா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டன், சத்யவதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், இருவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார்.


Tags : Pregnant woman commits suicide due to dowry abuse Husband, to mother-in-law Sentenced to 10 years in prison
× RELATED திருப்பூரில் ஈமு கோழி வளர்ப்பு திட்டம் நடத்தி செய்தவருக்கு 10 ஆண்டு சிறை