×

தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு

தாம்பரம்: தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் நேற்று அதிகாலை மின் கம்பி அறுந்து விழுந்ததால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மார்க்கத்தில், பல்லாவரம் ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலையில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற அனைத்து மின்சார ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, தாம்பரம் ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அறுந்து விழுந்த மின் கம்பியை

சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டு, காலை 7.20 மணிக்கு சீரமைத்தனர்.

இதற்கிடையில், மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் 9.30 மணிவரை இயக்கப்பட்டன. ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதை, ரயில் நிலையங்களில் முறையான அறிவிக்காததல், பயணிகள் வழக்கம் போல் புறநகர் ரயில் வந்து செல்லும் நடைமேடையில் காத்திருந்தனர். ஆனால், ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் நடைமேடையில் வந்து சென்றதால், பெரும்பாலான பயணிகள் ரயில்களை தவற விட்டனர்.

இதனால், அலுவலகம் செல்பவர்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கடும் அவதயிடைந்தனர். போக்குவரத்து ஊழியர்கள் நேற்று ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மின்சார ரயில்களில் பயணிக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஆனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.


Tags : Tambaram - On the beach route Rail service damaged due to power outage
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...