குண்டு எறியும் போட்டியில் நகராட்சி பள்ளி மாணவன் சாதனை

காஞ்சிபுரம்: மாநில அளவிலாள வினையாட்டு போட்டியில் கலந்து கொண்ட நகராட்சி பள்ளி மாணவன், குண்டு எறிதலில் சாதனை படைத்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 34வது தமிழ்நாடு மாநில ஜூனியர் மற்றும் சீனியர் திறந்த நிலை விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதையொட்டி, காஞ்சிபுரம் பி.எஸ்.சீனிவாச நகராட்சி பள்ளியை சேர்ந்த  பிளஸ் 1 மாணவன் சஞ்சய், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார். அவர், 34.86 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து 3ம் இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து, மாணவன் சஞ்சயை பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன்,, உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>