மின்சார மினிஸ்டருக்கு

ஷாக் கொடுக்கும் பாஜ: அதிமுக-பாஜ கூட்டணி இறுதியாக உறுதி செய்யப்பட்டாலும் குடைச்சல்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. குமாரபாளையத்தில் சீட்டு, கூட்டணியில் இருக்கும் தாமரைக்குத்தான் என்று கூறி வலம் வரும் அந்த ஓம்கார நபரால் மின்சார மினிஸ்டரு, கொஞ்சம் அதிர்ந்து போயிருக்காராம். அதற்கு காரணமும் இருக்காம். குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர் அவரது தந்தையாம். மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் அவரது மகனான ஓம்கார பிரமுகரும் பயங்கர பேமஸ் ஆனவராம்.

கட்சியை தவிர்த்து உள்ளூரில் அந்த பிரமுகர் நடத்தும் மற்ெறாரு அமைப்பும் பட்டிதொட்டியெல்லாம் தெரிஞ்சி இருக்காம். இதற்கும் மேலாக டெல்லி தலைமையிடமும் அந்த பிரமுகர் மிகவும் நெருக்கமாக இருக்கிறாராம். இதனால் மினிஸ்டர் தொகுதியில் அவரை களமிறக்க, கமலாலயமும் பிராக்கெட் போடுதாம். இதை அறிந்துதான், மின்சார அமைச்சர் கொஞ்சம் ஷாக் ஆகி இருக்காராம். இது ஒரு புறமிருக்க தாமரை கட்சியில் தனக்கு சீட் கிடைக்காவிட்டால், மினிஸ்டருக்கு எதிராக களமிறங்கி, தனது செல்வாக்கால் கணிசமான வாக்குகளை பிரிக்கவும் ஆயத்தமாகி வருகிறாராம்.

* வீடு வீடாக ரகசிய பொருள்: அ.தி.மு.க. நிர்வாகி பேச்சால் சர்ச்சை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை குன்னூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.  நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் கலந்து கொண்டார். சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சத்தார் பேசுகையில், ‘வரக்கூடிய சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் வீடு வீடாக சென்று ரகசிய பொருட்கள் வழங்கப்படும்’ என பேசினார். பொது மேடையில் அ.தி.மு.க. நிர்வாகி இதுபோன்று பேசியது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>