பிளஸ் 2 பொது தேர்வுக்கு தனி தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்?

சென்னை: அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு:மே 2021 பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி விண்ணப்பதாரர்கள் மார்ச் 6ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாகஅமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க தவறியவர்கள் மார்ச் 8 மற்றும் 9ம் தேதிகளில் அரசு தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தட்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Related Stories:

>