2வது அலை வீசுவதால் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காசநோய் குணப்படுத்தக்கூடிய நோய் என்று மக்கள் அலட்சியம் காட்டாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த ஒத்துழைக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இரண்டாம் அலை கொரோனா அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மக்கள் அலட்சியமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. தமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் சோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கேரளா, தமிழக எல்லைகளில் மட்டும் 26 இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளதை உறுதி செய்ய, அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>