இளநிலை அறிவியல் அலுவலர் பதவி தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை:டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலை பணிகளில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவி (2015-2019ம் ஆண்டுக்கானது) காலியாக உள்ள 72 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 24.8.2019 அன்று நடந்தது. இந்த தேர்வின் மூலம் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக 1,49 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு வருகிற 15, 16ம் தேதிகளில் நடைபெறும். தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவியில் காலியாக உள்ள 5 பதவிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. இதில் 4338 பேரின் மதிப்பெண், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>