டிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், முதலமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணிக்காக சென்ற இடத்தில் இந்திய காவல்துறை பெண் அதிகாரியிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராஜேஷ் தாஸை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் விசாரணை எந்தவித அழுத்தங்களும் இல்லாம் நடைபெறுவது ஓரளவு சாத்தியமாகும். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியல் என்பது குற்றம் புரிந்தவரை காப்பாற்றும் பதுங்கு குழியாகும். எனவே, ராஜேஷ் தாஸை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து, நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>