தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை: கம்யூனிஸ்ட் கட்சி தகவல்

சென்னை: தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்  உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய்த்தொற்று மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்து வரும் நிலையிலும் தா.பாண்டியன் உடல்நிலையில் மாற்றம் காணாத நிலை நீடிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>