கோயிலில் சாமிக்கு படைப்பதற்காக முயல் வேட்டையை அனுமதியுங்கள்: அதிமுக உறுப்பினர் கோரிக்கை

சென்னை: கோயிலில் சாமிக்கு படைப்பதற்காக முயல் வேட்டையை அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் கோரிக்கை வைத்தார். அதை நிராகரித்த அமைச்சர், சைவ முறையில் சாமி கும்பிடுங்கள் என்று அறிவுரை வழங்கினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஒட்டப்பிடாரம் சண்முகையா (திமுக) எழுத்து மூலம் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ”அப்படியொரு கருத்துரு அரசிடம் இல்லை. என்றாலும், தொழில் முதலீட்டாளர்கள் முன்வந்தால், டிட்கோ மூலம் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலூர் பெரியபுல்லான் என்ற செல்வம் (அதிமுக): எங்கள் தொகுதியில் உள்ள கோயிலில் முயல் வேட்டையாடி சாமிக்கு படைப்பது வழக்கம். எனவே, வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது என்று தடைச்சட்டம் இருக்கும் நிலையில், அதில் முயல் வேட்டைக்கு மட்டுமாவது அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: வன உயிரினங்களை பாதுகாப்பதே அரசின் கொள்கை. எனவே, காட்டு விலங்குகளை வேட்டையாட அனுமதிக்க முடியாது.

உங்களுடைய இந்த கோரிக்கையை பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, சைவ முறையில் சாமி கும்பிடுங்கள். ராதாபுரம் இன்பதுரை (அதிமுக): பணங்குடி அருகேயுள்ள குத்தப்பஞ்சான் அருவி பகுதியை சுற்றுலா தலமாக அறிவிப்பதுடன், அங்கு ஒரு உயிரியல் பூங்காவையும் அமைக்க வேண்டும். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: உறுப்பினர் சொல்வது புலிகள் சரணாலயம் இருக்கும் பகுதி. சாத்தியக்கூறுகள் இருப்பின் நிதி ஆதாரத்தை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: