கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் பயங்கர தீ: வனத்துறை வேடிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்காமல் வனத்துறை வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், புதர்கள் வறண்ட கிடக்கின்றன. காட்டு தீ ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான நிலப்பகுதியில் நேற்றிரவு காட்டு தீ ஏற்பட்டது.

தீயால் அப்பகுதியில் இருந்த மரங்கள், புதர்கள் எரிந்து நாசமாயின. இதனால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் வனத்துறையின் சார்பாக தீ தடுப்பு காவலர்கள் மற்றும் தீயணைப்பு ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது வரை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீயை கட்டுப்படுத்த ஊழியர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: