கவர்னர் தமிழிசை நேரடி கவனிப்பு: 31 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்...ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்!!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியில், 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு தி.மு.க. உறுப்பினர் ராஜினாமா செய்ததால், நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்தது. இதை தொடர்ந்து,  சட்டசபையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க புதிய ஆளுநராக பதவியேற்றவுடன் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்புக்கு முன்பாகவே நாராயணசாமி தலைமையிலான ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர். இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர்  சிவக்கொழுந்து அறிவித்தார். இதற்கிடையே சபாநாயகரின் அறிக்கை, அமைச்சரவை ராஜினாமா உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தொகுத்து அறிக்கையாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்துறைக்கு அனுப்பி வைத்தார்.  இதைத்தொடர்ந்து ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.  

இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், 31 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் புதுச்சேரி அரசு நிர்வாகத்தை கவர்னர் தமிழிசை  சவுந்தரராஜன் நேரடியாக கவனிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: