தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து... சிவகாசியில் மீண்டும் ஒரு வெடி விபத்து..: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து தற்போது நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். விபத்து குறித்த முழு சேத விவரம், உயிரிழப்புகள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.  

இது போல கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சாத்தூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>