கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து: தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம்

கடலூர்: கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநரால் பேருந்து பற்றோரு பேருந்து மீது மோதி விபத்து விபத்துக்குள்ளானது. கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளில் டிரைவர், கண்டக்டர்கள் வேலைக்கு வராமல் இருந்ததால் குறித்த நேரத்தில் பஸ்களை வெளியே எடுக்க முடியவில்லை.

வேலை நிறுத்தம் காரணமாக தூத்துக்குடி, விருதுநகர், கும்பகோணம், மரக்காணம் என பல இடங்களில் மிகக்குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூரில் உள்ள 9 அரசு பனிமனையில் 500க்கும் அதிகமான பேருந்துகள் உள்ளன. இதில் 4 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இதில் 90%க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படாததால் பணிமனை அதிகாரிகள் தற்காலிக ஓட்டுநரை வைத்து பேருந்துகளை இயக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அவர் முன் அனுபவம் இல்லாதவர் என்றும் ஆட்டோ ஓட்டுநர் என்றும் கூறப்படுகிறது. அப்போது தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. மற்றவர்கள் வருவதற்குள் தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓடினார்.

Related Stories: