×

நாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா?.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்

சென்னை: 9,10 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். இன்று காலை தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் ஒன்று, 9, 10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் 9,10 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக, கற்பித்தல் அறிவு மாணவர்களுக்கு அவசியம் வேண்டும் என்பதால் மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை 9, 10,11-ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து இருந்தாலும் நாளை முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்பட்டுள்ளது. நாளை பள்ளிகளுக்கு  போலாமா, வேண்டாமா? என்று குழப்பத்தில் தமிழக மாணவர்களில் மனநிலை உள்ளது.


Tags : Should we go to school tomorrow or not? ..... Students are confused by two announcements alternating
× RELATED தாம்பரத்தில் நாளை மின்தடை