பெட்ரோல் நிரப்புவதற்கும், சிலிண்டர் வாங்குவதற்கும் கடன் கேட்டு கனரா வங்கியில் இளைஞர்கள் மனு : வங்கி ஊழியர்கள் ஷாக்!!

தேனி : கல்விக்கடன், வீட்டுக் கடன் வழங்குவது போல பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் வாங்கவும் வங்கிக்கடன் வழங்க வேண்டும் என்று தேனி அல்லிநகரம் வங்கியில் இளைஞர்கள் மனு அளித்துள்ளனர்.நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. சென்னையை பொறுத்தவரை, பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கண்ணீர் வடிக்கும் நிலைமையில் உள்ளனர். இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் சமையல் கேஸ் விலை ஒரே மாதத்தில் ரூ.100 உயர்ந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது. கூடிய விரைவில் கேஸ் விலை ரூ.1000ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில், பெட்ரோல் நிரப்புவதற்கும், சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கும் கடன் கேட்டு கனரா வங்கியில் இளைஞர்கள் சிலர் மனு அளித்துள்ளனர். இதனால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Related Stories:

>