ஆல் பாஸ் எதிரொலி!: நாளை முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

சென்னை: 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்பேரவையில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதேபோல் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதை தொடர்ந்து, 2020 - 2021ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுதேர்வின்றி தேர்ச்சி அடைய செய்வார்கள் என்று சட்டப்பேரவையில் பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைய செய்யப்பட்டுவிட்டதால் ஏற்கனவே பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்ட 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டிய தேவை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு பள்ளி தொடங்கும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>