புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிக்கு டெல்லி முன்னாள் காவல் ஆணையர் பீம் சேன் பாஸியின் பெயர் பரிசீலனை?

புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய துணைநிலை ஆளுநராக முன்னாள் டெல்லி காவல் ஆணையாளர் பீம் சேன் பாஸி நியமிக்கப்படலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத்தலைவரிடம் முதல்வர் நாராயணசாமி புகார் எதிரொலியாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடியை மத்திய அரசு கடந்த 16ம் தேதி திரும்பப்பெற்றது. இதையடுத்து தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இன்னும் சில மாதங்களில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில் அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் பதவிக்கு டெல்லியின் முன்னாள் காவல் ஆணையாளரான பீம் சேன் பாஸியின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்களை தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர் தேர்வாணையத்தின் உறுப்பினராக தற்போது பாஸி பதவி வகித்து வருகிறார். அவரது 5 ஆண்டு பதவிக்காலம் வருகின்ற 28ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில் புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக  பீம் சேன் பாஸியின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக  டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: