மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு மறுப்பு; தமிழக மாணவர்களின் 3,000 இடங்கள் பறிபோனது: இடஒதுக்கீட்டில் அநீதி சரி செய்யப்படுமா?

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளான எம்.எஸ், எம்.டி பி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன.

ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. 2021-ம் ஆண்டுக்கான எம்டி, எம்எஸ், மேற்படுப்புக்கான நீட் தேர்வுக்கான அறிவிக்கையை அகில இந்திய தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழக மாணவர்களுக்கான 3000-க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோனதாக புகார் எழுந்துள்ளது. மருத்துவ மேற்படிப்புக்காக நீட் நுழைவு தேர்வு அறிவிக்கையில் இடஒதுக்கீடு பற்றி போதிய தகவல் இல்லை.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 50% இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என தகவல் தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் அந்தந்த மாநிலங்கள்  பின்பற்றும் இடஒதுக்கீடு அமலாகும். மாநில அரசிடம் இருந்து பெறப்படும் 50% அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இடஒதுக்கீடு பற்றி தெளிவான அறிவிப்பு இல்லை. தமிழக மருத்துவ கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 960 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்கும் இந்த இடங்கள் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் நிரப்பப்படுகின்றன.

மத்திய அரசின் 50% இடஒதுக்கீட்டை பின்பற்றினால் ஓபிசி மாணவர்கள் 400-க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைக்கும். கடந்த 7 ஆண்டுகளாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்க கோரி திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடஒதுக்கீடு கோரிக்கையை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆனால் நிபுணர் குழு அறிக்கையை நடப்பாண்டில் செயல்படுத்த மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் கல்வியாண்டிலாவது அகில இந்திய தொகுப்பில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>