தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடக்கம்..: இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், பிப் 2-ம் தேதி ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைபெற்றது. இந்தநிலையில் பிப் 23-ம் தேதி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இந்தநிலையில், 25-ம் தேதி 2021-22-ம்  ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்கும். 26-ம் தேதி இடைக்கால பட்ஜெட் மீது 2-ம் நாள் பொது விவாதம் நடைபெறும். மேலும் தொடர்ந்து, 27-ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு  பதிலுரை அளிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும் இன்று சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கும், விருதுநகர் மாவட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் சபாநாயகர் தனபால் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>