இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை கவலைகிடம்.: வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தா.பாண்டியனின் உடல்நிலை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சிறுநீர பிரச்சனையினால் கடந்த 10 ஆண்டுகளாக டயாலிஸ் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென்று அவருக்கு சிறுநீரக பாதிப்பு அதிகமானது. அதனைத்தொடர்ந்து ரத்த அழுத்தமும் அதிகரித்ததால் தா.பாண்டியனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வெண்டிலேட்டர் உதவியுடன் இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அரசு மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories:

>