எதிரெதிர் துருவங்களாக நிற்கும் சந்தன வீரப்பன் மனைவி, மகள்

சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாநில மகளிரணி தலைவியாக உள்ளார். அவரது மகள் வித்யா, பாஜவில் மாநில மகளிர் அணி துணைத் தலைவியாக இருக்கிறார். இதில் முத்துலட்சுமியை மேட்டூர் வேட்பாளராக நிறுத்தலாம் என்கின்றனர்.அதே நேரத்தில் கிருஷ்ணகிரியில் வசிக்கும் வித்யாவை, ஓசூர் தொகுதி பாஜ வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு வலியுறுத்தி வருகிறது. வீரப்பன் மனைவியையும், மகளையும் அரசியல் எதிரெதிர் துருவங்களில் நிற்க வைத்து விட்டதே என்கின்றனர் வீரப்பனின் உறவினர்கள்.

* 50 நாள் வேலை செய்தால் 30 நாளுக்கு தான் சம்பளம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளி கிராம மக்கள் நூறுநாள் வேலை திட்டம் பற்றி குமுறுகிறார்கள். ‘50 நாட்கள் வேலை செய்தால் அதற்குண்டான கூலி கிடைப்பதில்லை. 30 நாட்களுக்குண்டான கூலி மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மீதி 20 நாட்களுக்கான பணம் எப்ப வரும்? எப்படி வரும்? என்று தெரியாது. இந்த வேதனையை தான் அதிமுக அரசு ஒரு சாதனையாக சொல்கிறது. ஆகட்டும் பார்ப்போம்...இன்னும் கொஞ்சம் நாள் தானே? எங்களது வேதனையை வெளிப்படுத்த தானே தேர்தல் வருகிறது’ என்று குமுறுகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி பகுதி மக்கள்.

Related Stories: