பெட்ரோல் விலை ஏன் உயருது? கப்பல் வர லேட் ஆகுது: எல்.முருகன் லக லக...

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தாறு மாறா உயர்ந்து வருகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகளின் அதிகப்படியான வரிவிதிப்பே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதே வேளை, ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களும், அது சார்ந்த கட்சி நிர்வாகிகளும் தங்களுக்கு விருப்பம் போல் விளக்கம் அளித்து வருகின்றனர். ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனக்கும் தர்மச்சங்கடமாக உள்ளது’’ என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ தமிழக தலைவர் எல்.முருகன், காஸ் விலை 2013-14ல் ஆயிரம் ரூபாய் இருந்துச்சு.

இப்போது 700 ரூபாய்க்கு கிடைக்குது. குறைந்துகொண்டுதான் இருக்கு. சர்வதேச விலை என்பது கொரோனா காலத்தில் ஒரு மந்த நிலை உள்ளது. இந்தியாவில் அதற்கான விலையேற்றம் சர்வதேச விலையேற்றத்தை பொறுத்து இருக்கு. அரசாங்கம் இதனை கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவில் அரசின் எண்ணெய் நிறுவனங்கள் வேலை செய்கிறது. நாம் எல்லாம் இம்போர்ட் செய்துகொண்டு இருக்கிறோம். அவை வந்து சேர வேண்டிய சூழல் உள்ளது. கப்பல் வருவதற்கு லேட் ஆகுது, அதற்கான போக்குவரத்து விஷயங்களை பார்க்க வேண்டி உள்ளது’’ என தொடர்பில்லாமல் பேசினார்.

Related Stories: