ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கோஷ்டி முழக்கம்: உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகம் ஆவின்கேட் அருகே நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அணியை சேர்ந்த வழக்கறிஞர்கள் தனியாகவும், ஓபிஎஸ் மற்றும் ஆதிராஜாராம் ஆதரவு வக்கீல்கள் ஒரு பிரிவாகவும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அருகருகே நடந்த இந்த போட்டி நிகழ்ச்சி அங்கிருந்தவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அண்ணாநகர் ஆர்.வி பாபு, திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் து.சூர்யநாராயணன் ஆகியோர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வி.எஸ்.சேதுராமன், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் நவநீதகிருஷ்ணன் எம்பி, வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் சி.திருமாறன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>