பேராசிரியர் கார் மீது வெளிநாட்டினரின் கார் மோதல்: முதல்வர் வீட்டின் அருகே பரபரப்பு

சென்னை: சென்னை கந்தன்சாவடி பகுதியை சேர்ந்த மாநில கல்லூரி பேராசிரியர் வர் மகாலிங்கம் (44). இவர், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை சந்திக்க நேற்று முன்தினம் இரவு அவரது இல்லத்துக்க காரில் வந்தார். பின்னர் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு அமைச்சர் வீட்டிற்குள் சென்றார். அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று, மகாலிங்கத்தின் கார் மீது மோதியது. அப்போது, காரின் அருகில் நின்றிருந்த திண்டுக்கல் மாவட்ட வேளாண் துறை ஐஏஎஸ் அதிகாரி விஜயலட்சுமியின் உதவியாளரான கார் ஓட்டுநர் அருள் விஜயபிரகாசம் (37) படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்தியவர் வெளிநாட்டை சேர்ந்த ஜோ (54) என்பதும், மது போதையில் இருந்ததும் தெரிந்தது. இந்த சம்பவத்தால் முதல்வர் வீட்டின் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>