செய்தி துளிகள்...

பெண்ணுக்கு கத்தி குத்து: வியாசர்பாடி தேபா தெருவை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி(34). இவரது தங்கை அஞ்சலி(30). இவர் கடந்த 5 மாதங்களாக தனது அண்ணன் வீட்டில் வசித்து வருகிறார். அஞ்சலியின் கணவர் சுப்பிரமணி நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து அஞ்சலியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அஞ்சலி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடிபோதையில் வாலிபர் தற்கொலை: கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(24). தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி காதல் தோல்வியால் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் எடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாள். புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் சிறுமியின் காதலன் பரத்(20) என்பவரை கைது செய்தனர்.

* அரும்பாக்கம் வெங்கடகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் விஷ்ணுவர்தன்(20). பட்டதாரி. குரூப் 1 தேர்வு எழுத தயாராகி வருகிறார். நேற்று முன்தினம் இரவு செல்போனை பார்த்துகொண்டிருப்பதை அவரின் தந்தை ஏழுமலை கண்டித்ததால் விஷ்ணுவர்தன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டில் நகை கொள்ளை: அரும்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் பாபு(40). இவரது மனைவி பூர்ணிமா(34). தனியார் கல்லூரி பேராசிரியை. கடந்த 5ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளைபோனது. புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் ரகமதுல்லா(35), ஜமாலூதீன்(40) ஆகியோரை கைது செய்தனர்.

பேருந்தில் இருந்து விழுந்து மாணவன் காயம்: திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம்(49). இவரது மகன் சந்துரு(14). நெற்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை திருவேற்காட்டில் இருந்து பேசின்பிரிட்ஜ் வழியாக செல்லும் (தடம் எண் 59) பேருந்தில் படிக்கட்டில் பள்ளிக்கு பயணித்தான். நெற்குன்றம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது நிலைதடுமாறி விழுந்தான். இதில் பேருந்து சக்கரம் ஏறி பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறான். புகாரின்பேரில் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுனர் ராஜாவை(50) கைது செய்தனர்.

லாரி மோதி மாணவி பலி: பெரம்பூர் ஆதிசேஷன் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் மதுமிதா(20). தனியார் கல்லூரி மாணவி. நேற்று முன்தினம் காலை சக தோழி அர்ச்சனாவுடன்(19) மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.  செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் மாதவரம் நெடுஞ்சாலையில் சென்றபோது அவ்வழியே வந்த லாரி மோதி மதுமிதா பரிதாபமாக இறந்தார்.

போக்சோவில் வாலிபர் கைது: மாதவரம் உடையார் தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை பெரம்பூர் கொல்லம் தோட்டம் 2வது தெருவை சேர்ந்த சாந்தகுமார்(22) காதலித்து பாலியல் பலாத்காரம் செய்தார். புகாரின்பேரில் மாதவரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோவில் அவரை கைது செய்தனர்.

முதியவர்களிடம் பண மோசடி: திருவான்மியூர் பகுதியில் முதியவர்களிடம் டிரேடிங் கம்பெனியில் முதலீடு செய்வதாக கூறி பண ேமாசடி செய்த புழல் மணிகண்டனை(40) சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>