விழிப்புணர்வு குறைந்துவிட்டதால் கொரோனா பரவலை தடுக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: பொதுமக்களிடம், முகக்கவசம், சமூக இடைவெளி கேள்வி குறியாகி வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மகாராஷ்டிரா, கேரளாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து எல்லை மாவட்டங்களிலும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளனர். பல்வேறு நிகழ்ச்சிகள், எவ்வித கொரோனா வழிமுறைகள் பின்பற்றாமல் நடைபெறுகிறது. இதுபோன்ற செயல்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>