1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது

சென்னை: பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(52). இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் ஒன்று அளித்தார். அதில், பள்ளிக்கரணை ஸ்ரீகாமகோட்டி நகர் 7வது மெயின் ரோட்டில் 3,600 சதுரடி கொண்ட1.5 கோடி மதிப்பு காலி மனை உள்ளது. இங்கு பெயர் விலாசம் தெரியாத சிலர் ‘துளசி ஹாப்பி ஹோம்’ என்ற பெயரில் பேனர் வைத்து கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து சைதாப்ேபட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் சான்று எடுத்து பார்த்தபோது, என் பெயர் மற்றும் எனது மனைவியும் இணைந்து கிரிபிரசாத் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்தது போல் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. என்று கூறியிருந்தார்.புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிரிபிரசாத், ரகு ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>