ஜெ. நினைவிட கட்டுமான பணியில் தாமதம் பொதுப்பணித்துறையின் 2 அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு; டம்மி பதவிக்கு தூக்கியடிப்பு

சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை கவனித்து வந்த 2 அதிகாரிகளை திடீரென பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.79.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க கால நிர்ணயம் செய்தது. ஆனால் இதற்காக நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் அதை திறம்பட செய்யவில்லை. இதனால் ஜெயலலிதா நினைவிடத்தை குறிப்பிட்ட காலத்தில் திறக்க முடியாததுடன், 2 முறை மூடப்பட்டது.

இந்நிலையில்,  இந்த நிலையில், அரசு செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன இயக்குனராகவும், கோவை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் விஸ்வநாத் கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளராகவும், பாசன மேலாண்மை பயற்சி நிறுவன இயக்குனர் முரளிதரன் கோவை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மண்டல கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன கண்காணிப்பு பொறியாளராகவும், செயற்பொறியாளர் ராஜேந்திரன் கீழ் பெண்ணையாறு கோட்ட வடிநில செயற்பொறியாளராகவும், செயற்பொறியாளர் கங்காதரன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக செயற்பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: