திருவண்ணாமலையில் 12வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து, பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த செப்டம்பரில் இருந்து அனுமதிக்கப்படுகின்றனர். ஆனாலும், கிரிவல தடை மட்டும் நீங்கவில்லை. இந்நிலையில், மாசி மாத பவர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை(26ம் தேதி) மாலை 3.49 மணிக்கு தொடங்கி, 27ம் தேதி மாலை 2.42 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு உத்தரவு வரும் 28ம் தேதி வரை நடைமுறையில் இருப்பதாலும், கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள பக்தர்கள் கிரிவலம் வந்தால், மீண்டும் இங்கு தொற்றுபரவும் வாய்ப்பு உள்ளதாலும் 12வது மாதமாக கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது, பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>