முதல்வர், துணை முதல்வருக்கு வரும் 27ம்தேதி பாராட்டு விழா: தனியார் பள்ளிகள் சங்கங்கள் நடத்துகிறது

சென்னை: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சுயநிதி நிபுணத்துவ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சி.பி.எஸ்.இ ஸ்கூல் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் திட்டமில்லா பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை வரைமுறைபடுத்த அரசுக்கு நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. இதை ஏற்று, 1.1.2011க்கு முன்பு திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை நகர்புற ஊரமைப்புத்துறையின் முறையான அனுமதி பெற்று வரைமுறைப்படுத்திக்கொள்ள உரிய அரசாணையை வெளியிடப்பட்டது.

இதற்காகவும், மேற்கண்ட பகுதிகளில் அமைந்துள்ள விண்ணப்பிக்காத கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கியதற்காகவும் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கும் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்களுக்கும் கூட்டமைப்புகளின் சார்பாக இதயபூர்வமான நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள், பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கான கோவிட்-19 தொற்றுக்கு பிந்தைய உலகத்திற்கு கல்வி நிறுவனங்களை தயார்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் வரும் 27ம் தேதி காலை 9.15 மணி அளவில் சென்னை, திருவான்மியூர், ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: