மதுரை மத்திய சிறையில் உண்ணாவிரதம் மாவோயிஸ்ட் ஆதரவாளர் மயங்கி விழுந்தார்

மதுரை: மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்ததாக, மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த விவேக் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி கடந்த 21ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சிறைத்துறை அதிகாரிகள் சமாதானம் செய்தும் ஏற்கவில்லை. இந்நிலையில் நேற்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்த விவேக், மாலை 4 மணி அளவில் திடீரென மயக்கமடைந்து விழுந்து விட்டார். உடனடியாக சிறைக்காவலர்கள் அவரை மீட்டு, சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவை ஏற்பட்டால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார் என கூறப்படுகிறது. மாவோயிஸ்ட் ஆதரவாளர் உண்ணாவிரதமிருந்து மயங்கி விழுந்தது மதுரை சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories:

>