திருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தில் சங்கு, சக்கரம்: தேனி பக்தர் நன்கொடை

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு 2 கோடியில் 4 கிலோ தங்கத்திலான சங்கு, சக்கரத்தை தேனியை சேர்ந்த பக்தர் நன்கொடையாக வழங்கினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2 கோடி மதிப்பில் 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரம் ஆகியவற்றை கோயிலில் அதிகாரிகளிடம் தேனியை சேர்ந்த பக்தர் தங்கதுரை என்பவர் நேற்று வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 50 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசிக்கிறேன். கடந்தாண்டு மார்ச் 23ம் தேதி ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்தேன். ஆனால், கொரோனா ஊரடங்கால் தரிசிக்க முடியவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் 30 நாட்கள் எனது உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் இருந்தேன். அப்போது, ஏழுமலையானுக்கு சங்கு மற்றும் சக்கரம்  வழங்குவதாக வேண்டிக் கொண்டேன். சில நாட்களிலேயே எனது உடல் ஆரோக்கியம் அடைந்தது. இதையடுத்து, ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரத்தை நன்கொடையாக வழங்கினேன். இந்த உடலில் உயிர் இருக்கும் வரை பெருமாளுக்கு என்னால் முடிந்த நன்கொடை வழங்குவேன்,’’ என்றார்.

Related Stories:

>