போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகளை முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கையில், முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியம் திருத்தியமைத்து உயர்த்தி அறிவிக்கப்படும். இந்த வழக்கமான நடைமுறையை அதிமுக அரசு பின்பற்றாததால் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து அமைச்சர் நடத்தி வரும் கண்துடைப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களை ஆத்திரமூட்டியுள்ளது. அமைச்சரின் பொறுப்பற்ற அணுகுமுறை தொழிலாளர்களை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளியுள்ளது. சாதாரண மக்களுக்கு சேவையாற்றும் பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை மீது ஆக்கபூர்வமாக பேசி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>